×

தினமும் மாலையில் படியுங்கள் தஞ்சை மாநகர் பகுதியில் அடை மழையால் வியாபாரிகள் பாதிப்பு


தஞ்சை, ஜன.12: தஞ்சை மாவட்டத்தில் விடாது பெய்து வரும் தொடர் மழையால் வியாபாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் பொங்கல் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 1.35 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா, தாளடி சாகுபடி முடிந்துள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் தற்போது சூழ்பிடித்து கதிர் விடும் நிலையில் பயிர்கள் உள்ளன. இப்போது பால்பிடிக்கும் நிலையில் பயிர்கள் உள்ளதால் மழை பெய்தால் கடும் பாதிப்பை சந்திக்கும். பால்பிடிக்கும் பருவத்தை சிதைத்து கதிர் பதராகும் அபாயம் ஏற்படும். இதனால் இப்பருவத்தில் மழை பெய்வதை விவசாயிகள் விரும்புவதில்லை. ஆனால் பருவ மாற்றுத்தின் காரணமாக தற்போது அடைமழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் பெய்த மழை நேற்று இரவு வரை தொடர்ந்தது. இதனால் பல பகுதிகளில் சம்பா, தாளடி வயல்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. பல பகுதிகளில் கதிர்விட்ட பயிர்கள் வயலில் சாய்ந்து முளைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நிவர், புரெவி புயலுக்கு பெய்து வரும் இந்த அடைமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு (மி.மீ) தஞ்சை 15, வல்லம் 13, குருங்குளம் 16, திருவையாறு 12, பூதலூர் 11, திருக்காட்டுப்பள்ளி 8, கல்லணை 6, ஒரத்தநாடு 10, நெய்வாசல் தென்பாதி 16, வெட்டிக்காடு 10, கும்பகோணம் 25, பாபநாசம் 15, அய்யம்பேட்டை 27, திருவிடைமருதூர் 17, மஞ்சலாறு 23, அணைக்கரை 6, பட்டுக்கோட்டை 24, அதிராம்பட்டிணம் 9, ஈச்சன்விடுதி 17, மதுக்கூர் 10, பேராவூரணி 7 என மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இம்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தஞ்சை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் அடைமழையால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. மேலும் பொங்கல் திருநாளுக்காக சாலையோரங்களில் வியாபாரம் செய்து வரும் கரும்பு வியாபாரிகள், மண்பானை வியாபாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Tags : Traders ,area ,Tanjore ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...