×

வடக்கே திருவண்ணாமலை, தெற்கே திருப்பரங்குன்றம் இல்லந்தோறும் தீபம் ஏற்றி வழிபடுவோம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

 

சென்னை: வடக்கே திருவண்ணாமலை, தெற்கே திருப்பரங்குன்றம் இல்லந்தோறும் தீபம் ஏற்றி வழிபடுவோம் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிவபெருமான் அக்னி ஜோதியாக தேவர்களுக்கு காட்சியளித்த இடம் திருவண்ணாமலை. அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதீகப்படி, வடக்கே திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது.அதுபோலவே, தெற்கே குமரன் குடியிருக்கும் குன்றான திருப்பரங்குன்றத்திலும், இந்த ஆண்டு தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தடைகளை தாண்டி, முருக பக்தர்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, பாரம்பரிய முறையில் திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. கார்த்திகை தீப திருநாளான நேற்று, இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவோம். தமிழகத்தை சூழ்ந்துள்ள அரசியல் இருள் விலகி புத்தொளி பிறக்க, அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மையிடம் வேண்டுவோம். அதுபோலவே, பல ஆண்டுகளுகளுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் தீப தூணில் மகா தீபம் ஏற்றிடுவோம். அனைவருக்கும் எனது மனமார்ந்த கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Tiruvannamalai ,Thiruparankundram ,Union Minister ,L. Murugan ,Chennai ,Union Minister of State ,Karthigai Deepa ,Lord ,Shiva ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி...