×

இணைய வழியில் நடைபெறும் ஒருங்கிணைந்த கல்வி பயிற்சி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சிஇஓ வழங்கினார்

புதுக்கோட்டை ,ஜன.12: இணைய வழியில் நடைபெறும் ஒருங்கிணைந்த கல்வி பயிற்சி ஆசிரியர்களுக்கு சான்றிதழை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி வழங்கினார், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரவிந்தோ சொசைட்டி மற்றும் தமிழ்நாடு சமக்ரஹ சிக் ஷா இணைந்து அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி மூலம் இன்னோவேட்டிவ் பாதசாலா என்ற தலைப்பின் கீழ் அக்டோபர் மாதம் முதல் 12 வாரங்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த 84 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று வருகின்றனர். இதற்கான பயிற்சியில் கலந்து கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கற்றல் கற்பித்தல் இணைய வழி பயிற்சியை 12 வாரங்கள் நமது மாவட்டத்தில் நடத்துகிறார்கள். தற்பொழுது 8 வாரங்கள் முடிவுற்றுள்ளது. இன்னும் 4 வாரங்கள் மீதமுள்ளது. இப்பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கற்றல் இடைவெளி ஏற்படாமல் இருக்க இந்த புத்தாக்க பயிற்சியில் ஆர்வமுடன் பங்குபெற்ற உங்களையும், உங்களது பள்ளியையும் மாவட்டத்தில் முன்னிலைப்படுத்தியதற்கு எனது பாராட்டுக்கள். இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொண்ட குழந்தைகளின் முன்னேற்றம், கற்பனைத்திறன், பெரியோர்களை மதித்தல், எப்பொழுதும் உற்சாகமாக இருத்தல் போன்ற ஆலோசனைகளை 1 முதல் 5 வகுப்புகள் வரை உங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும். இந்த கல்வி சான்றிதழ் பெறக்கூடிய 38 ஆசிரியர்களும் மாநில மற்றும் தேசிய அளவில் உங்களது செயல்திட்டம் தேர்வு செய்யப்பட்டு டெல்லியில் சென்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வென்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Tags : CEO ,training teachers ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி...