×

ஆன்லைன் பந்தய செயலி நடிகை நேஹா சர்மாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

 

புதுடெல்லி: ஆன்லைன் பந்தய தளம்( 1xBet) செயலி மூலம் இந்தியாவில் பணமோசடி நடந்ததாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை விசாரித்த அமலாக்கத்துறை அவர்களின் ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது. இந்த வழக்கில், மாடலும் நடிகையுமான நேஹா சர்மா நேற்று அமலாக்க இயக்குநரகம் முன் விசாரணைக்கு ஆஜரானார். அவரின் வாக்குமூலத்தை பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Enforcement Directorate ,Neha Sharma ,New Delhi ,India ,Shikhar Dhawan ,Suresh Raina ,
× RELATED விபத்தில் எஸ்எஸ்ஐ பலி