புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,849 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை, ஜன. 12: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக 6,849 முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசும்போது, கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளை 225 லிட்டர் அளவில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக 2 குளிர்சாதனப் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 6849 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. இதில் 91 அரசு மருத்துவமனைகளில் 4,587 பேருக்கும், 378 தனியார் மருத்துவமனைகளில் 1489 பேருக்கும், இவர்களுடன் 773 பேருக்கும் என மொத்தம் 6,849 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. இவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தடுப்பூசி போடுவது குறித்த ஒத்திகையும் மாவட்டத்தில் 10 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 868 மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு. பூவதி, சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related Stories:

>