கூடலூர் ஊராட்சியில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்

பொன்னமராவதி,ஜன.12: பொன்னமராவதி அருகே கூடலூர் ஊராட்சியில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில், பொன்னமராவதி அருகே உள்ள கூடலூர் ஊராட்சியில் கூடலூர், சித்தூர் பகுதியில் உள்ள புறம்போக்கு பகுதி மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகின்றது. இதனால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மணல் கடத்தல் நடைபெறும். இந்த ஊரில் கள ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>