×

பெரம்பலூர் அருகே பரபரப்பு அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க கோரி பிச்சை எடுத்து மனு அளிக்கும் போராட்டம்

பெரம்பலூர்,ஜன.12:பெரம் பலூர் மாவட்டத்தில் அனைத்து நலவாரியங்களில் பதி வுசெய்துள்ள அனைத்து வகைத் தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காததைக் கண்டித்து, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக, பிச்சைஎடுத்து மனு அளிக்கும் போராட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து நலவாரியங்க ளில் பதிவுசெய்துள்ள அ னைத்து வகைத் தொழிலா ளர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கா ததைக் கண்டித்து, தமிழ் நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாள ர்கள் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக, பிச்சை எடுத்து மனுஅளிக்கும் போராட்டம் நடைபெற்றது.பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நா டு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் கள் மக்கள்முன்னேற்ற சங் கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். 50பேர் கலந்துகொண்டு, பிச்சை எடுக்கும் விதமாக மண் சட் டிகளைக் கைகளில் ஏந்திய படி அரசுக்கு எதிராக கோஷங்கள். எழுப்பினர் பின்னர் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற் குச் சென்று நேரில் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

பெரம்பலூர்,ஜன.12:வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங்ஆர். சவான் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடை பெற்றது. பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெற்ற முகாம்களில் மனுஅளித்த நாரணமங்கலம் பிரதானசாலை, அண்ணாநகர், விஜயகோபால புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் நேற்று நேரில் சென்று களஆய்வு மேற் கொண்டார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் பேசுகையில், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் பெயர் சேர்த்தல் (படிவம்-6)பெயர் நீக்கம் (படிவம்-7), பெயர் திருத்தம் (படிவம்-8) , ஒரே சட்டமன்ற தொகுதியில் வேறு வாக்கு சாவடி மையத்திற்கு மாறுதல் (படிவம்-8ஏ) என மொத்தம் 28,205 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தகுதி‘யான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் சப் கலெக்டர் பத்மஜா, கலெக் டரின் நேர்முக உதவியா ளர்(பொது) சுப்பையா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் சக்திவேல், தேர்தல் தாசில்தார் துரைராஜ் மற்றும் அனைத்து தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

Tags : agitation ,Perambalur ,Pongal ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி