×

பார்வையாளர் பங்கேற்பு விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல்

பெரம்பலூர்,ஜன.12: பெரம்பலூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், விபத்து ஏற்படுத்திய சிறுவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா நெய்குப்பை கிராமம், காலனிப் பகுதியைச்சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அஞ்சலை. இவரது கணவர் செல்வராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், தனது 11 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கூலித்தொழிலாளியான அஞ்சலை கடந்த 9ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு நெய்குப்பை - புதூர் சாலையில் நடந்து வந்துக்கொண் டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த டிராக்டர் மோதி அருகேயுள்ள குட்டையில் விழுந்தார். பின்னர், விபத்தை ஏற்படுத்திய டிராக்டரும் அவர் மீது விழுந்ததில் அஞ்சலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய டிராக்டரை ஓட்டி வந்த 15வயதுசிறுவனை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த பெண்ணி ன் வாரிசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி, இறந்த பெண்ணின் உறவி னர்கள் அஞ்சலையின் உடலை வாங்க மறுத்து பெரம்பலூர் மாவட்டஅரசுத் தலைமை மருத்துவமனை முன்பு நேற்று விசிக கட்சியினருடன் சேர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இட த்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Relatives ,visitor participation accident ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...