அரியலூரில் மக்கள் குறைதீர் நாளில் இணையதளம் வழியாக பெறப்பட்ட 73 மனுக்கள்

அரியலூர், ஜன.12: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. இணையவழி மூலம் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 73 மனுக்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்த கலெக்டர், இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, வாட்ஸ்அப் மூலமும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில், துணை கலெக்டர் ஏழுமலை, கலெக்டர் பிஏ ரவிச்சந்திரன், தொடர்புடைய பிறத்துறை அலுவலர்கள் இணையவழி வாயிலாக கலந்துகொண்டனர்.

Related Stories:

>