×

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணி

அரியலூர், ஜன.12: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் சவான் அரியலூரில் ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில், கலெக்டர் ரத்னா முன்னிலையில் 3ம் கட்டமாக நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்ததாவது: இதுவரை அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம் மூலமாக படிவம் 6ல் 20,250 பேர், படிவம் 7ல் 1,838 பேர், படிவம் 8ல் 2,632 பேர், படிவம் 8யு-ல் 1,126 பேர் என மொத்தம் 25,846 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அவ்வாறு அளிக்கப்பட்டுள்ள படிவங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கள விசாரணை செய்யப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களால் முடிவு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ., ஜெய்னுலாப்தீன், கலெக்டரின்
நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், ஆர்டிஓக்கள் ஜோதி(அரியலூர்), பூங்கோதை (உடையார்பாளையம்), தாசில்தார்கள் குமரையா, சந்திரசேகரன், கலைவாணன், தேன்மொழி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : office ,Ariyalur Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...