கூட்டு பலாத்கார சம்பவம் பெண்ணுக்கு நீதிகேட்டு மாதர்சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகை, ஜன.12: நாகையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதிகேட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாகை அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் எழிலரசி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லதா, தலைவர் சுபாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகையில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணைத் தலைவர் கஸ்தூரி, துணைச் செயலாளர்கள் மாலா, அகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>