×

மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை

மயிலாடுதுறை, ஜன.12: மயிலாடுதுறை அருகே நேற்று திடீர் சூறாவளி வீசியதால் 50க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்தது. இதில் வீடுகள் சேதமடைந்தது. ஒரு சில கிராமங்களில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே கொற்கை, பாண்டூர், புத்தகரம், பொன்னூர் போன்ற பகுதிகளில் நேற்று திடீரெ சூறாவளி வீசியதில் புயலில் சிக்கி சின்னாபின்னமாக்கிய காட்சிபோல் மரங்கள் வேருடனும் பகுதியும் முறிந்து விழுந்தது. புத்தகரம் நடுத்தெரு, தெற்குத்தெரு, கீழபாண்டூர் பகுதியில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது. சாலைஓரத்தில் உள்ள மரங்கள் வேருடன் சாலையில் சாய்ந்தது. 30க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மரத்துடன் கீழே சாய்ந்து மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. 50க்கும்மேற்பட்ட வீடுகளில் மரங்கள் விழுந்ததால்கூரை வீடு சேதமடைந்து வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் சேதமாகியது. 5 கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாய வயல்களில் வீசிய சூறாவளியால் பயிர்கள் அனைத்தும் அப்படியே சாய்ந்து விழுந்தது. இன்னும் 10 தினங்கள் கழித்து அறுவடைக்குத்தயாராக இருந்தநிலையில் தரையில் சாய்ந்ததால் பாதிக்கும்மேல் வீணாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

மயிலாடுதுறை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மூவலூர்மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாக்கம்சக்திவேல் சம்பவ இடம் சென்று ஆறுதல் அளித்தனர், மயிலாடுறையிலிருந்து தீயணைப்பு மற்றும்மீட்புக்குழுவினர் சென்று சாலையில் கிடந்த மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர், சாலை போக்குவரத்தை சரிசெய்தனர். அதிமுக மாவட்ட செயலாளர் விஜிகே.செந்தில்நாதன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சந்தோஷ்குமார், நகரசெயலாளர் கார்த்தி, உட்பட 30க்கும்மேற்பட்டோர் சென்று ஆறுதல் அளித்து 600 உணவுப் பொட்டலங்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வர்கள் சென்று பாதிக்கப்பட்ட பகுதியில் கணக்கீடு செய்தனர். திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இமயநாதன் மற்றும் திமுகவினர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடியற்காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த செங்கரும்பு, மஞ்சள், இஞ்சி, மண் பானைகள், சட்டிகள், நெட்டி மாலைகள், தேங்காய், பழங்கள் விற்பனை குறைந்தது. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ள பொருள்கள் வீணாகி நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வருணபகவான் கருணை காட்டினால் மட்டுமே பொங்கல் பண்டிகைக்காக கொண்டு வந்துள்ள பல்வேறு பொருட்கள் விற்பனையாகி விவசாயிகளுக்கு இனிப்பு பொங்கலாக மாறும் இல்லையென்றால் விவசாயிகளுக்கு கசப்பு பொங்கலாக மாறிவிடும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில் வடக்குவீதியில் பழைய தாலுகா அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த மழையில் தாலுகா அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
வேதாரண்யம் பகுதியில் நேற்றுகாலை 8 மணிமுதல் மாலை 6மணிவரை 13 செ.மீ மழையும், தலைஞாயிறில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

Tags : district ,Naga ,Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறை அருகே பாத்ரூமில் பதுக்கி...