வேதாரண்யத்தில் 131 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

வேதாரண்யம், ஜன.12: வேதாரண்யத்தில் 131 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மாற்றுத்திறானாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் 131 பயனாளிளுக்கு ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்து 777 மதிப்பிலான உதவி உபகரணங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரவீன் பி நாயர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது: இன்றைய தினம் மத்திய அரசு நிறுவனமான அலிம்கோ நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 131 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்து 777 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனுடையவர்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், உதவி மேலாளர் (அலிம்கோ நிறுவனம்) சாம்சன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சுப்பையன், ஒன்றியக்குழு தலைவர் கமலாஅன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>