தாந்தோணிமலை அருகே சிறுமியிடம் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை

கரூர், ஜன. 12: கரூர் தாந்தோணிமலை அடுத்துள்ள தோரணக்கல்பட்டி பகுதியை சேர்ந்த 13வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், சிறுமியின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>