முடிதிருத்தும் தொழிலாளி கொலைக்கு கண்டனம் கரூரில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 12: கரூரில் முடி திருத்தும் தொழிலாளி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சாமானிய மக்கள் கட்சி நிர்வாகி குணசேகரன் தலைமை வகித்தார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி ஜெயராமன், சுயாட்சி இந்தியா கட்சி தேசிய நிர்வாகி கிறிஸ்டினா சாமி உட்பட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கரூரில் பட்டப்பகலில் முடிதிருத்தும் தொழிலாளி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories:

>