×

சமூக வலைதளத்தில் சர்ச்சை கேள்விகள்; சினிமா வாய்ப்பின்றி எப்படி பிழைக்கிறீர்கள்?.. கேலி செய்தவருக்கு நடிகை நெத்தியடி பதில்

மும்பை: பாலிவுட் நடிகையும் பாடகியுமான சோபி சவுத்ரி, சமீபத்தில் உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹாலிவுட் பிரபலம் ஜெனிபர் லோபஸை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த இணையவாசி ஒருவர், ‘திரைப்படங்கள், இணையத் தொடர்கள் அல்லது பாடல்கள் எனப் பெரிதாக எந்த வேலையும் இல்லாமல் பாலிவுட்டில் நீங்கள் எப்படி இத்தனை ஆண்டுகளாகப் பிழைக்கிறீர்கள்?’ எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்த சோபி சவுத்ரி, ‘திரையில் நடிக்கவில்லை என்றால் வெற்றி பெறவில்லை என்று அர்த்தம் கிடையாது.

கடந்த 17 ஆண்டுகளாக நேரடி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி உள்ளேன். அதன் மூலம் சம்பாதிக்கிறேன். மேடை நிகழ்ச்சிகளில் முன்னணிப் பெண் தொகுப்பாளினியாக உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘இந்தியாவில் முதல் 10 இடங்களில் உள்ள நடிகைகள் மட்டுமே அதிகப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை முன்பே உணர்ந்து கொண்டேன்; அதனால் தான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’ என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதேபோல், ‘புகைப்படத்திற்காகக் கெஞ்சினீர்களா?’ எனக் கேட்ட மற்றொருவருக்கு, ‘எதற்காகவும் நான் யாரிடமும் கெஞ்சியது இல்லை. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய உரிமையில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்’ என்று அவர் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.

Tags : Nethiadi ,Mumbai ,Bollywood ,Sophie Choudhary ,Hollywood ,Jennifer Lopez ,Udaipur ,
× RELATED பலூனில் காஸ் நிரப்பும் போது மைசூரு...