நந்தவனத்தில் 27 மரக்கன்று நடல் ஆண்டாள் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜை

திருவில்லிபுத்தூர், ஜன. 12:  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியை முன்னிட்டு அதிகாலையில் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஆண்டாளுக்கும், ரங்க மன்னருக்கும் அக்காரவடிசல்  படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதிகாலையில் நடைபெற்ற இந்த பூஜையில் தென் மண்டல ஐஜி முருகன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தக்கார் ரவிச்சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாள் பிறந்த நந்தவனத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>