×

அருப்புக்கோட்டையில் கிராம குறுக்கு சாலைகளில் நடக்குது அடிக்கடி விபத்து எச்சரிக்கை விளக்கு அமைக்கப்படுமா?

அருப்புக்கோட்டை, ஜன. 12:  மதுரை - அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் இந்த நான்கு வழிச்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் கனரகவாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளது. அருப்புக்கோட்டை பந்தல்குடி செல்லும் ரோட்டில் நான்கு வழிச்சாலையில் செளடாம்பிகா பொறியியற்கல்லூரி, வாழ்வாங்கி செட்டிக்குறிச்சி, சேதுராஜபுரம், கொப்புச்சித்தம்பட்டி, உடையநாதபுரம், வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்ல கிராம குறுக்குச்சாலை கிளைப்பாதை உள்ளது. இந்த ரோட்டின் வழியாக அந்தந்த ஊர்பொதுமக்கள் டூவீலர், சைக்கிள் மற்றும் பஸ்சில் இருந்து இறங்கி நடந்துச்செல்வார்கள்.

இந்த கிராம குறுக்குச்சாலைகளுக்கு செல்லும் ரோட்டில் எந்த எச்சரிக்கை விளக்கோ, மின்விளக்கோ இல்லை. இதனால் இரவுநேரங்களில் இப்பகுதியில் இருட்டாக இருப்பதால் நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதிவிபத்து ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இதுபோன்ற கிளைப்பாதை முகப்பில் எச்சரிக்கை விளக்கு மற்றும் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் வேணுகோபால் கூறியதாவது: அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கிராம குறுக்குச்சாலைகளுக்கு செல்லும் பாதையில் நைட்ரிலெக்ட் விளக்குகள் அமைக்க வேண்டும் என பலமுறை கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். ஆனால், விளக்குகள் அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, உடனடியாக விளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்திற்கு, கலெக்டர் அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

Tags : crossroads ,village ,Aruppukottai ,accident ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...