×

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மம்சாபுரம் பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், ஜன.12:  திருவில்லிபுத்தூர் அருகே  உள்ள மம்சாபுரம் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து  திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் உதயசூரியன், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் தங்கமாங்கனி, பல்க்ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜேந்திரசோழன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மம்சாபுரம் பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags : Demonstration ,alliance parties ,DMK ,Mamsapuram ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி