குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தேனி: போடி இளைஞர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்ப்புலிகள் அமைப்பினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், தேனியில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை போராட்டம் நடத்தினர். அப்போது, ‘போடி கீழ சொக்கநாதபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் மர்மமான முறையில் படுகொலை செய்த குற்றவாளிகளை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதில் மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, தென் மண்டல துணைச் செயலாளர் ஆதிநாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>