×

அவதூறாக பேசும் ரேஷன் கடை ஊழியர்கள்

சின்னமனூர், ஜன. 12: சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தில் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேஷன் கடை மூலம் 1500 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் ரேஷன் ஊழியர்கள் அவதூறாக பேசுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர்கள், ரேஷன் பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்களை அவதூறாக பேசுகின்றனர். இவர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கடந்த 6 மாதமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றனர்.

Tags : ration shop employees ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை சங்கத்தினர் மனு