×

பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் சங்கம் மனு

தேனி, ஜன. 12: பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகளை திறக்க தமிழக அரசை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். இந்திய மாணவர் சங்க தேனி மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில், அந்த அமைப்பினர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனாவை காரணம் காட்டி, கடந்த 11 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேசமயம் வருவாய் ஈட்டும் டாஸ்மாக் மதுபானக்கடைகள், தியேட்டர்கள், மால்ககள் திறக்கப்பட்டுள்ளன.

இணைய வழி கல்வி, நேரடி கல்வி முறைக்கு ஈடாகாது. லேப்டாப், ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மலைக்கிராம மாணவர்களுக்கு இணையவழி கல்வி பயிலுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, அரசு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அவைகளின் விடுதிகளை திறந்து நேரடி கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும்’ என மனுவில் தெரிவித்துள்ளனர். இலவச வீட்டுமனை கோரி மனு: உத்தமபாளையம் தாலுகா கலைவாணி கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக கிராமியக் கலைஞர்களுக்கு மாவட்ட மற்றும் மண்டல  விருதுகள் வழங்கப்படவில்லை. இந்த விருதுகளை வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு பெற்ற கிராமியக் கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க  வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச இசை கருவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதில்  சங்க நிர்வாகிகள் மகேஸ்வரன், மணிகண்டன், பொன்ராஜ், தனுஷ்கோடி, முனியாண்டி,  ஆனந்த் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Office ,Student Union ,colleges ,Collector ,schools ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...