அருந்ததியர் மயானத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன. 12: அருந்ததியர் சமூகத்தினருக்கு சொந்தமான மயானத்தில் ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை சார்பில், தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வசித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் அருந்ததியர் காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை  அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில் அமைப்பைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Related Stories:

>