தேவகோட்டை அருகே புளிய மரம் வெட்டி கடத்தல் வேன் பறிமுதல்

தேவகோட்டை, ஜன.12: தேவகோட்டையில் மரத்தை வெட்டி கடத்த பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது. தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் திருமணவயல் குரூப் மாரிச்சான்பட்டி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் புளியமரம் உள்ளது. இதனை மாரிச்சான்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இரண்டு பேர் நேற்று திருட்டுத்தனமாக வெட்டி வேனில் கடத்தினர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கடத்தலை தடுத்தனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை தேவகோட்டை தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு வந்து சேர்த்தனர். சம்பவம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: