பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருமணம்

தேவகோட்டை, ஜன.12: தேவகோட்டை பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருமணம் நடைபெற்றது. பெருமாளை நேசித்து ஆண்டாள் திருப்பாவை பாடினார். ஆண்டாள் பாடிய 27வது பாடலான ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாடலால் லயித்த பெருமாள் ஆண்டாளை ஏற்றுக்கொண்டதாக ஐதீகம். 28, 29, 30 திருப்பாவை பாடல்களை பெரியாழ்வார் படித்தார் என்பதை பக்தர்கள் ஐதீகமாக கொண்டு அதன் அம்சமாக ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருமணம் நடத்துவர். இது கூடாரவல்லி திருமணம் எனப்படும். நேற்று முன்தினம் தேவகோட்டை  ரெங்கநாதப்பெருமாள் கோவிலில் கூடாரவல்லி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திருமணம் ஆக வேண்டியவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோவில் சார்பாக மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தனர். திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டது

Related Stories:

>