தேவகோட்டையில் பூங்கா சுவர் இடிந்து விழுந்தது

தேவகோட்டை, ஜன.12: தேவகோட்டை தியாகிகள் பூங்கா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகருக்கு அழகு சேர்க்கும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான தியாகிகள் பூங்கா உள்ளது. உரிய பராமரிப்பில்லாததால், பூங்காவை சுற்றிலும் ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்துள்ளனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, நேற்று முன்தினம் பூங்கா இரும்பு கிரில்லுடன் கூடிய சுற்றுச்சுவரையொட்டி வியாபாரிகள் சிலர் கரும்புகளை அடுக்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, திடீரென பாரம் தாங்காமல் பூங்காவின் கிரில் கேட்டுடன் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தேவகோட்டை நகராட்சி ஆணையாளர்(பொ) அய்யனார் உத்தரவின்பேரில் இடிபாடுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

Related Stories: