×

பயன்படுத்தப்படாத நிதியை மீண்டும் பொதுநிதியில் சேர்க்க வேண்டும் ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை, ஜன.12: மாவ ட்ட ஊராட்சி பொது நிதி குடிமராமத்து பணிக்காக எடுக்கப்பட்ட நிலையில் அதில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியை மீண்டும் பொது நிதிக்கு மாற்ற வேண்டுமென கவுன்சிலர்கள் பேசினர். சிவகங்கையில் மாவ ட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் பொன்மணிபாஸ்கரன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி செயலர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இதில் நாகனி செந்தில்குமார்(திமுக) பேசுகையில், ஓர் ஆண்டாக நடத்தப்படாமல் இருந்த மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலை நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று வந்து நடத்த வைத்தோம். அம்மா மினி கிளினிக்குகளில் டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இல்லை. ஏற்கனவே ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றுபவர்களே மினி கிளினிக்குகளிலும் பணியாற்றுகின்றனர். எனவே இதற்காக இக்கூட்டத்தில் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் தேவையில்லை என தெரிவித்தார். இதையடுத்து இந்த தீர்மானங்கள் நீக்கப்பட்டன.

மேலும், மாவட்ட ஊராட்சி பொது நிதியில் இருந்து குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியை மீண்டும் பொதுநிதியில் சேர்க்க வேண்டும். 15வது நிதிக்குழு பணிகளுக்கு கலெக்டர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசு விழாக்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கவுன்சிலர்களையும் அழைக்க வேண்டும். தற்போதுள்ள பொது நிதி ரூ.3 கோடியே 81 லட்சத்தில் அனைத்து கவுன்சில் பகுதிகளுக்கும் பணிகள் நடக்கும் வகையில் சமமாக பிரித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் துணைத்தலைவர் சரஸ்வதிஅண் ணா, கவுன்சிலர்கள் சுந்தர்ராஜன், மதிவாணன், ரவி, ராதாபாலசுப்பிரமணியன், மஞ்சரிலெட்சுமணன், ஆரோக்கியசாந்தாராணி, ஸ்டெல்லா, கருப்பையா, ராமசாமி உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

Tags : Councilors ,panchayat meeting ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை