லண்டன்: இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில், ஆர்சனல்-செல்ஸீ அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் லண்டன் நகரில் நடந்து வருகின்றன. இதில், ஆர்சனல் – செல்ஸீ அணிகள் இடையே நடந்த போட்டியில் இரு தரப்பு வீரர்களும் ஆக்ரோஷமாக மோதினர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் செல்ஸீ அணியின் டிரெவோ சலோபா, 48வது நிமிடத்திலும், ஆர்சனல் அணியின் மைக்கேல் மெரினோ 59 நிமிடத்திலும் கோல் போட்டனர். இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை நடந்த 13 போட்டிகளில் 9ல் வென்று, ஆர்சனல் அணி, 30 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. மேன் சிட்டி அணி, 13ல் 8ல் வென்று 25 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், செல்ஸீ அணி, 7ல் வென்று 24 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.
