புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக, ஹாக்கி இந்தியாவுக்கு அவர் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜோர்ட் மாரிஜினே, இந்திய மகளிர் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிகிறது. இவர், கடந்த 2021ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது, இந்திய மகளிர் அணிக்கு பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
