- பிரக்ஞானந்தா
- லண்டன் செஸ் கிளாசிக்
- லண்டன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- லண்டன் செஸ் கிளாசிக் ஓபன்
- வெலிமிர் ஐவிக்
- லண்டன், இங்கிலாந்து.…
லண்டன்: லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சிறப்பான வெற்றிகளை பெற்று, வெலிமிர் இவிக் உடன் சேர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் லண்டன் நகரில், லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பங்கேற்று ஆடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் ஹங்கேரி கிராண்ட் மாஸ்டர் தாமஸ் ஃபோடோசை வென்ற பிரக்ஞானந்தா அடுத்த போட்டியில், இஸ்ரேல் சர்வதேச மாஸ்டர் ஐடன் ரோஸனை வீழ்த்தினார்.
இதையடுத்து, 6 சுற்றுகள் முடிவில் 5 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார். முதலிடத்தை, செர்பிய கிராண்ட் மாஸ்டர் வெலிமிர் இவிக்குடன் பிரக்ஞானந்தா பகிர்ந்து கொள்கிறார். பிரக்ஞானந்தா, சமீப போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று வருவதால், ஃபிடே உலக செஸ் தரவரிசை பட்டியலில் 7ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இந்தியாவை சேர்ந்த மற்றொரு கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி 5ம் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, ஃபிடே தரவரிசை பட்டியலில் டாப் 30 இடங்களில் 5 இந்தியர்கள் மட்டுமே உள்ளனர்.
