ஊராட்சி பகுதியில் 5,000 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.12: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சீனாங்குடி கிராமத்தில்  யூனியன் சேர்மன் ராதிகா பிரபு தலைமையில்  மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.  இயற்கை வளத்தை பாதுகாக்கும் நோக்கோடு ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியன் பிரசங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பு ஆண்டில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீனாங்குடி கிராமத்தில் மரக்கன்று நடும் விழாவை யூனியன் சேர்மன் ராதிகா பிரபு தலைமையேற்று தொடங்கி வைத்தார். இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் நாகமுத்து முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் 100 நாள் வேலை திட்ட பணியாள்கள் மூலமாக  மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

Related Stories:

>