வாலாந்தரவை ஊராட்சியில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம்

ராமநாதபுரம், ஜன.12: மண்டபம் மேற்கு ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முகவை கிருபானந்தம்  தலைமை வகித்தார். மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜீவானந்தம் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை  விடுத்தனர். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகராஜன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா, வாலாந்தரவை ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி பூரணவேல், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தவ்பிக்அலி, மாவட்ட கவுன்சிலர் ஆதித்தியன், திமுக ஒன்றிய கவுன்சிலர் வினோத், ஊராட்சி செயலாளர் முனியசாமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>