×

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

தொண்டி, ஜன.12: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தி உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தலைமை வகித்தார். நம்புதாளை தலைவர் ஜபுருல்லா முன்னிலை வகித்தார். செயலாளர் ராவுத்தர் வரவேற்றார். பயிர் காப்பீடு வழங்காத விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீடு தொகை நூறு சதவீதம் வழங்க வேண்டும், அதிகாரிகள் காப்பீடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேளாண் சட்டத்தை திரும்ப பெறாமல் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் தோல்வியில் தான் முடியும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். நம்புதாளை பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும், அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம், துணை தலைவர் சுமையாதனு இபுராகிம் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.

Tags : Muslim League ,
× RELATED தண்ணீர் பந்தல் அமைக்க கட்சிகளுக்கு...