×

நயினார்கோவில் ஒன்றிய பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ உறுதி

பரமக்குடி, ஜன.12: தினகரன் செய்தி எதிரொலியாக பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றிய பகுதிகளில்  மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பார்வையிட்டார். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள காரடர்ந்தகுடி,  ஆம்பக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் மழைநீர் தேங்கி நெல் மற்றும் மிளகாய் செடிகள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுகிவிட்டன. ஆகையாால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள தாளையடி கோட்டை, அ.காச்சான், நகரமங்களம், நகரம் உள்ளிட்ட கிராமங்களில் சேமடைந்த நெல் பயிர்களை பார்வையிட்டார். அங்குள்ள விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை பெற்று முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும்,  வேளாண்மை துறை அதிகாரிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, நயினார்கோவில்  ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஒன்றிய அவைத் தலைவர் சுந்தர்ராஜன்,  ஒன்றிய கவுன்சிலர்கள்  மதியம்,  ராஜூ மற்றும் அதிமுக  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Union Territories ,MLA ,
× RELATED ஒரு விரல் புரட்சியே… மக்களவைத்...