விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டும் மதிமுக வலியுறுத்தல்

திருமங்கலம், ஜன.12:  டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனே எற்கவேண்டும் என மதுரை தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை புறநகர் தெற்கு மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது. நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கதிரேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் தலைமை அறிவிக்கும் கூட்டணிக்கும் வேட்பாளருக்கும் ஆதரவாக தீவிர பிரசாரம் செய்வது, டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மேற்பார்வையாளர் நக்கீரனிடம் பூத்கமிட்டி பாரங்கள் கொடுக்கப்பட்டன. கூட்டத்தில் பொதுகுழு உறுப்பினர் முனியாண்டி, மாணவரணி செயலாளர் பொடா கணேசன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, அவைத்தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>