×

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருமங்கலம், ஜன.12:  மதுரைக்கு வரும் முதல்வரை வரவேற்பது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைக்க வரும் 16ம் தேதியும், திருமங்கலம் குன்னத்தூரில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா கோயிலை திறந்து வைக்க வரும் 30ம் தேதியும் முதல்வர், துணை முதல்வர் மதுரை வர உள்ளனர். இது தொடர்பான மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.

அமைச்சர் பேசுகையில், தமிழக வரலாற்றிலேயே முதல்வர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைப்பது இந்த முறைதான். அலங்காநல்லூர் வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவிற்கும் வரும் முதல்வர், துணை முதல்வருக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து குன்னத்தூர் வரையில் கட்சியினர் வரவேற்பு தரவேண்டும் என்றார்.  கூட்டத்தில் எம்எல்ஏ நீதிபதி, மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மாகலிங்கம், ஜெபேரவை செயலாளர் தமிழழகன் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,executives ,meeting ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...