ஊராட்சியில் பணிகள் சரிவர செய்யவில்லை வதிலை யூனியனை கவுன்சிலர்கள் முற்றுகை

வத்தலக்குண்டு, ஜன. 12: ஊராட்சியில் பணிகள் சரிவர செய்யவில்லை எனக்கூறி வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு ஒன்றியம், நடகோட்டை ஊராட்சியில் நேற்று ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை தலைவர் பணிகளை சரிவர செய்யவில்லை எனக்கூறி வார்டு உறுப்பினர்கள் பெருமாயி, சங்கீதா, பொன் மாயக்காள, தனலட்சுமி, அருள்முருகன், சுரேஷ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் வத்தலக்குணடு ஒன்றிய அலுவலகம் வந்து துணை தலைவரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து முற்றுகையை கைவிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், ‘துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்’ என கூறியிருந்தனர்.

Related Stories:

>