பழநியில் சாலையோர உணவகங்களில் சுத்தமா இல்லை சுகாதாரம் பக்தர்கள் புகார்

பழநி, ஜன. 12: பழநி நகரில் உள்ள சாதைப்பூச திருவிழா நெருங்கி வருவதால் பழநி நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால், பழநி நகரம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக அடிவாரம் பகுதியில் ஏராளமான தற்காலிக உணவு கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற கடைகளில் தற்போது விலை பட்டியல் வைக்கப்படுவதில்லை. டீ, இட்லி போன்றவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுபொருட்கள் பிளாஸ்டிக் தட்டுக்களில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து வழங்கப்படுகிறது. இதpனால் சூடான உணவு பொருட்களால் பேப்பர் உருகி நோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இவ்வாறு உணவு வழங்குவது தடை செய்யப்பட்டிருந்தும், அடிவார பகுதிகளில் தாராளமாக விற்பனை நடக்கிறது. மேலும், எச்சில் தட்டுகளை முறையாக கழுவாமால் அப்படியே மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், பக்தர்கள் சாப்பிட்டு விட்டு அந்த இடத்திலேயே கை கழுவுவதாலும், எச்சில் இலைகளை அதே இடத்தில் போட்டு விடுவதாலும் அநேக இடங்களில் மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட விலங்கினங்கள் சுற்றித்திரிந்து கொண்டிருப்பதால் போக்குவரத்திற்கும் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. இட்லி போன்றவை வெண்மையாக இருப்பதற்கும், இலகுவாக இருப்பதற்கும் வேதிப்பொருட்கள் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து தற்காலிக உணவு கடைகளில் விலை பட்டியல், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>