- எம்.ஜி.ஆர்
- விஜயகாந்த்
- விஜய்
- பிரேமலதா பாலிர்
- ஈரோடு
- ஈரோடு மாநகர் மாவட்டம்
- கிழக்கு
- மேற்கு
- தேமுதிக
- பிரேமலதா விஜயகாந்த்
- பொருளாளர்
- Sudheesh
ஈரோடு: தேமுதிக சார்பில் ஈரோடு மாநகர் மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு தொகுதி பூத் கமிட்டி முகவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
முன்னதாக பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரம் பூத்துக்கும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகிறது. ஜனவரி மாதம் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் தெளிவான முடிவு எடுத்து கூட்டணி அறிவிக்கிறோம்.
ஒரே எம்ஜிஆர், ஒரே விஜயகாந்த் தான். இவர்களுக்கு மாற்று விஜய் கிடையாது. 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும். கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சிக்கு தான் தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கும். இப்போது இருக்கும் கட்சிகள் கூட்டணி தர்மத்தை மதிக்கிறார்கள். எஸ்ஐஆர் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு எஸ்ஐஆர் குறித்த தெளிவு இன்னும் இல்லை.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுப்பது தவறான முன் உதாரணம். வாக்கு திருட்டு நடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும். மனித உரிமைகள், ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும். எனவே இதுகுறித்து வெள்ளை அறிக்கை மூலம் ஒன்றிய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
