×

அமெரிக்காவில் விருந்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி, 10 பேர் காயம்

 

ஸ்டாக்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஸ்டாக்டன் நகரில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச்சென்றதால் அவர் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.

Tags : United States ,Stockton ,Stockton, California, United States ,
× RELATED தைவான் மெட்ரோவில் மர்ம நபர் கத்திக்குத்து; 3 பேர் பலி