சென்னை: இந்தியப் பாரம்பரியக் கலைகளின் புரவலராகத் திகழ்ந்த ஸ்ரீ பொட்டிப்பட்டி ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்திய அஞ்சல் துறை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு ‘மை ஸ்டாம்ப்’ அஞ்சல் தலையை வெளியிடப்பட்டது. தொழில், சமூக மேம்பாடு மற்றும் கலை ஆகிய துறைகளில் ஓபுல் ரெட்டியின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நடைபெறும் ஓராண்டு கால நூற்றாண்டு கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வாக இந்திய அஞ்சல் துறை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு ‘மை ஸ்டாம்ப்’ அஞ்சல் தலையை நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக நிகழ்ச்சி கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது, அப்போது அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் பிரதாப் சி. ரெட்டி மற்றும் சென்னை அஞ்சல் சேவைகள் இயக்குநர் மேஜர் மனோஜ் ஆகியோர் இந்தத் தபால் தலையை வெளியிட்டனர்.
