பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை

கூடலூர்,ஜன.12: கூடலூரை அடுத்துள்ள  மதுரை ஊராட்சிக்குட்பட்ட குங்கர்மூலை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதனை சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சம் செலவில் 370 மீட்டர் தூரத்திற்கு இந்த சுற்றுச் சுவர் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி  மற்றும் பூமி பூஜை ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரெஜிமேத்யூ, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் - அனந்தசயனம்,  தலைமை ஆசிரியை யோகேஸ்வரி, ஆசிரியர் ஜமால் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>