×

துண்டை மாற்றியதால், அவர் கருத்து மாறிப்போச்சு: செங்கோட்டையன் குறித்து கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ் விமர்சனம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கோபிசெட்டிபாளையம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டு வந்தது. இந்த கோட்டையின் தளபதியாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இணைந்தவர், நேற்று கோபிசெட்டிபாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பரவலாக வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இன்று கோபியில் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரக்கூட்டத்தில் எடப்பாடி பேசியதாவது, “இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று யார் யாரோ கனவு காண்கிறார்கள்.

ஆனால் இது அதிமுகவின் கோட்டை. கோபிச்செட்டி பாளையத்தில் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். வாக்குகளை கேட்க வீடு வீடாக வந்தவர், ராஜினாமா செய்ய மக்களிடம் அனுமதி கேட்டாரா?” கிட்டதட்ட 2,3 ஆண்டு காலமாக இயக்கத்திற்குள் இருந்துகொண்டே இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டார்.

அதனால்தான் நீக்கப்பட்டார்” மாற்றுக்கட்சிக்கு போய் இருக்கிறார்; போனவர் சும்மா இருந்தால் பரவாயில்லை; தூய்மையான ஆட்சியைக் கொடுப்போம் என்கிறார்; எம்ஜிஆர், ஜெயலலிதா, நான் முதலமைச்சராக இருந்தபோது செங்கோட்டையன் அமைச்சராக இருந்தார்; அப்போது நாங்கள் தூய்மையான ஆட்சி கொடுக்கலையா? துண்டை மாற்றியதால், அவர் கருத்து மாறிப்போச்சு என செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

Tags : EPS ,Sengkottayaan ,Kobisetipalayam ,Erode ,Secretary General ,Edapadi Palanisami ,Gobisetipalayam ,KOBISETI PALACE ,EMPEROR ,Adimuga ,Senkotthayan ,Tamil Nadu Victory Club ,
× RELATED விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட...