சிறுமி பலாத்கார வழக்கில் 6 மாதத்திற்கு பின் வாலிபர் கைது

பாலக்காடு,ஜன.12: மன்னார்க்காட்டை அடுத்த ஞாறங்கப்பொற்றாவைச் சேர்ந்தவர் முகமது (எ) சைதலவி (30). இவர் இப்பகுதியில் சீசன் வியாபாரம் செய்து வருபவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் 12 வயது சிறுமியை முகமது (எ) சைதலவி பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் மன்னார்க்காடு போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான சைதலவியை 6 மாதமாக  தேடி வந்தனர். இந்நிலையில் சைதலவி மன்னார்க்காடு பகுதிக்கு வந்துள்ளதாக மன்னார்க்காடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லிபிக்கு கிடைத்த ரகசியதகவலின் அடிப்படையில் எஸ்.ஐ., ராஜேஷ் தலைமையில் போலீசார் சைதலவியை மன்னார்க்காடு பஸ் ஸ்டாண்டு பகுதியில் வைத்து கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>