திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 15ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

ஊட்டி, ஜன. 12: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் கிளப்புகள் மூடப்பட்டிருக்கும். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சில்லரை மது விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின் 1981ன் படி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்.2 உரிம தலங்கள் (கிளப்புகள்) ஆகியவை மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கட்டாயமாக டாஸ்மாக் கடைகள் மற்றும் கிளப்புகள் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி கடைகள் திறந்தால் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கிளப் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதேபோன்று 26ம் தேதி குடியிரசு தினத்தன்றும், 28ம் தேதி வள்ளளார் தினத்தன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>