×

ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறும் ஆண்ட்ரே ரஸல்: கேகேஆர் அணியின் புதிய ‘பவர் கோச்’ ஆக நியமனம்!

கொல்கத்தா: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் அதிரடியான ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த ரஸல், இந்த ஓய்வு அறிவிப்புடன் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதாவது, அடுத்த 2026 ஐபிஎல் சீசன் முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ‘பவர் கோச்’ (Power Coach) என்ற புதிய பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.

ஐபிஎல் மினி ஏலத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், ரஸல் ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு குறித்து ரஸல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஐபிஎல்-லில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். கேகேஆர் அணியில் 12 சீசன்களின் அன்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளுடன், ஐபிஎல்-லில் எனது பயணம் அற்புதமாக இருந்தது. மற்ற உலக லீக்குகளில் தொடர்ந்து விளையாடுவேன். அதேசமயம், கேகேஆர் அணியிலிருந்து வெளியேறவில்லை. கேகேஆர் அணியின் ‘பவர் கோச்’ என்ற புதிய பொறுப்பில் நீங்கள் என்னைக் காண்பீர்கள். புதிய அத்தியாயம். அதே ஆற்றல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Andre Russell ,IPL ,KKR ,Kolkata ,Indian Premier League ,Kolkata Knight Riders ,Russell ,
× RELATED திருவண்ணாமலையில் நடக்கும் திமுக...