மாற்றுத்திறனாளி மாயம்; தாய் போலீசில் புகார்

மொடக்குறிச்சி, ஜன. 12: மொடக்குறிச்சி அருகே உள்ள கோவிந்த  நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (எ) சண்முகம் (53). மாற்றுத்திறனாளி. வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த  8ம் தேதி தனது வீட்டில் வளர்த்து வரும் பூனை குட்டியை அட்டை பெட்டியில்  வைத்து வெளியே விட்டு வருவதாக கூறி சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் வேலம்மாள் (78)  மொடக்குறிச்சி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு  செய்து மூர்த்தியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>