- உச்ச நீதிமன்றம்
- தலைமை நீதிபதி
- புது தில்லி
- அகில இந்திய நடுவர்கள் பூப்பந்து சாம்பியன்ஷிப்
- தியாகராஜ் விளையாட்டு வளாகம்
- தில்லி
- சூர்யகாந்த்
புதுடெல்லி: டெல்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு வளாகத்தில் அகில இந்திய நீதிபதிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடக்க விழாவின்போது செய்தியாளர்களை சந்தித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியதாவது,‘‘நீதிபதிகள் தங்களது வயதுக்கு ஏற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். நீதிபதிகளின் பணி நேரம் நீண்டது.
அவர்களின் பணியின் தன்மை மிகவும் மன அழுத்தத்தை கொண்டது. உட்கார்ந்திருக்கும் நேரம் நீண்டது. அனைத்து நீதிபதிகளும் பொழுதுபோக்கு நடவடிக்கையில் பங்கேற்று அதனை ஒரு பழக்கமாக்க வேண்டும். அவர்களை ரீசார்ஜ் செய்து கொள்வதற்கு பொழுதுபோக்கு தேவை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். இது அவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பற்றி விழிப்புடன் இருப்பதைக் காட்டுகின்றது” என்றார்.
