மாவட்டத்தில் 67 மிமீ மழை

திருப்பூர், ஜன. 11: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 67 மிமீ மழை பெய்தது. திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. மாநகரப்பகுதியான காலேஜ் ரோடு, அவினாசி ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதேபோல், தென்னம்பாளையம் சந்தை அருகிலும் மழை தேங்கி நின்று சகதியாக மாறியது. இதனால், பொதுமக்கள் காய்கறி வாங்க செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிக்கு முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:  திருப்பூர் வடக்கு 12.00(மி.மீ), கலெக்டர் அலுவலகம் 9(மி.மீ) அவிநாசி 17 (மி.மீ), பல்லடம் 2 (மி.மீ), ஊத்துக்குளி 6 (மி.மீ),திருமூர்த்தி அணை 2(மி.மீ), அமராவதி அணை 2(மி.மீ), உடுமலை 3 (மி.மீ),  மடத்துக்குளம் 4 (மி.மீ)என மொத்தம் 67மி.மீ. மழை பெய்தது.

Related Stories:

>