கழிவுநீருடன் தேங்கி நிற்கும் மழைநீர்

உடுமலை, ஜன. 11:  உடுமலை அருகே ஜே.ஜே.நகரில் கழிவுநீருடன் தேங்கி நிற்கும் மழைநீரால் கிராம மக்கள் அவதியடைகின்றனர். உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் பேரூராட்சி ஜே.ஜே.நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து பெருமாள்புதூர் பிரிவு சாலையில், சமீபத்தில் பெய்த மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதனுடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கழிவுநீரிலேயே நடந்து செல்லும் நிலை உள்ளது.மழைநீர் தேங்கி நிற்பதால் கிழுவன்காட்டூர், பார்த்தசாரதிபுரம், அண்ணாநகர், பாப்பான்குளம், சாமராயபட்டி, குமரலிங்கம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். உடனடியாக தண்ணீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>